வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது பரோடா வங்கி!

பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர், முதுநிலை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது பரோடா வங்கி!
Published on
Updated on
1 min read


பரோடா வங்கியில் உதவி துணைத் தலைவர், முதுநிலை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளநிலைப் பட்டத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Vice president - 03
வயதுவரம்பு: 28 - 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Manager - 03
வயதுவரம்பு: 25 - 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager - 03
வயதுவரம்பு: 23 - 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்று, குறைந்தபட்சம் 3 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிஇ, பி.டெக், எம்சிஏ மற்றும் டேட்டா மேனெஜ்மென்ட் ஸ்கில்ஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் பெண்கள் ரூ.100. மற்ற பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.in/career.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com