விண்ணப்பித்துவிட்டீர்களா? - ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் இந்து அறநிலையத்துறையில் வேலை

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள உதவி சுயம்பாகம்‌, இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை
Published on
Updated on
1 min read


தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள உதவி சுயம்பாகம்‌, இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்த விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிர்வாகம்: இந்து சமய அறநிலையத்துறை

மொத்த காலியிடங்கள்: 05 

பணி: உதவி சுயம்பாகம்‌(உள்துறை) - 02 
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இத்திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்கவழக்களின்படி நைவேத்யம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. 

பணி: இளநிலை உதவியாளர் (வெளித்துறை)- 01 
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி :  பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: தட்டச்சர் (வெளித்துறை) - 01
சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600
தகுதி:  தட்டச்சர் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு உயர்நிலை மற்றும் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி அப்ளிகேஷன் மற்றும் ஆபிஸ் ஆட்டோமேஷன் அல்லது அதற்கு இணையான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌. 

பணி: டிக்கெட் பஞ்சர் (வெளித்துறை) - 01 
தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 11,600 - 36,800

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  கோயில் அலுவலக வேலை நாள்கள் அல்லது https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் அல்லது பெற்று பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் - 637001 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.01.2022 

மேலும் விபரங்களை அறிய https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in அல்லது https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/4887/411/document_1.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com