கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ரயில்வேயில் வேலை வேண்டுமா?-10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! 

தென் மத்திய ரயில்வேயில் விளையாட்டுப் பிரிவின் கீழ் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2022, 9:30 am

தினமணி


தென் மத்திய ரயில்வேயில் விளையாட்டுப் பிரிவின் கீழ் குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 21

நிர்வாகம் : தென் மத்திய ரயில்வே 

பணி : விளையாட்டுப் பிரிவு குரூப் 'சி'

சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.20,200

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுகளில் கலந்துகொண்டு சாதனை படைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : www.scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.500. எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர் கள் விளையாட்டு சோதனைகள், விளையாட்டு சாதனைகள் மற்றும் தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022 

மேலும் விவரங்களை அறிய www.scr.indianrailways.gov.in அல்லது https://www.ifinish.in/rrc_scr_sports/pdfs/sports.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.