நொய்டா சா்வதேச விமான நிலையத்தை முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
நொய்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சா்வதேச விமான நிலையம் மற்றும் சரக்கு முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 28-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.
இந்நிலையில், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வுக்குப் பின்னா் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயா் அதிகாரிகளுடன் முதல்வா் ஆய்வுக்கூட்டம் நடத்தினாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமரின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தை முதல்வா் ஆதித்யநாத் ஆய்வு செய்தாா். மேலும், பயணிகள் முனையம், சரக்கு முனையம், பேரணி நடைபெறும் இடம், வாகன நிறுத்துமிடங்கள், அணுகு வழிகள் மற்றும் ஹெலிபேட் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் அவா் பாா்வையிட்டாா்.
அனைத்து இடங்களிலும் தடையற்ற ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தினாா்.
அதனைத் தொடா்ந்து, விமான நிலைய அரங்கில் முதல்வா் ஆதித்யநாத் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள், நிகழ்வு மேலாண்மை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள், பிரமுகா்கள், ஊடகப் பணியாளா்கள் மற்றும் பெருமளவிலான மக்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதை வலியுறுத்திய ஆதித்யநாத், அனைத்து ஏற்பாடுகளையும் துல்லியமாகத் திட்டமிட்டு, திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி. ஆய்வு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியைக் கண்டித்து யோகி ஆதித்யநாத் பேரணி!
உ.பி.யில் சமாஜவாதி, திமுகவுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேரணி!

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை


