ரூ. 1.15 லட்சம் சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ரூ. 1.15 லட்சம் சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய சணல் கழகத்தில் காலியாக உள்ள 63 பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய சணல் கழகத்தில் காலியாக உள்ள 63 பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 63

வேலைவாய்ப்பு அறிக்கை எண்: 1/2021

பணி: Account(S5)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.28,600 - 1,15,000

தகுதி: வணிகவியல் துறையில் முதுநிலைப் பட்டம். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பி.காம் முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 

பணி: Junior Assistant (S3)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.21,500 - 86,500

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று கணினியில் எம்எஸ் வேர்டு, எக்ஸல் தெரிந்திருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: பணி: Junior Inspector (S3)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.21,500 - 86,500

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கொள்முதல், விற்பனை, தரப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் பிணையளித்தல், சேமிப்பு, போக்குவரத்து போன்ற பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.12.2021 தேதியின்படி, 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.jutecorp.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.1.2022

மேலும் விவரங்கள் அறிய www.jutecorp.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com