கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ரூ.58,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Published On :

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: உதவி சுயம்பாகம்( உள்துறை) - 02
சம்பளம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500
தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இத்திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்க வழக்கங்களின் படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: இளநிலை உதவியாளர் (வெளித் துறை) - 01    
சம்பளம்: மாதம் ரூ.18,500 - ரூ. 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பணி: தட்டச்சர் (வெளித் துறை) - 01
சம்பளம்: மாதம் ரூ. 18,500 - ரூ.58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் உயர்நிலை அல்லது தமிழ் தட்டச்சில் உயர்நிலை, ஆங்கில தட்ச்சில் கீழ்நிலை அல்லது தமிழில் கீழ்நிலை , ஆங்கிலத்தில் உயர்நிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கணினி அப்பிளிகேசன் மற்றும் ஆபிஸ் ஆட்டோமேசன் அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை) - 01    
சம்பளம்: மாதம் ரூ. 11,600 - ரூ.36,800
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாகவும் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://hrce.tn.gov.in/ அல்லது hrcehome/index.php ஆகிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ  அல்லது இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று பெற்றுக் கொண்டு தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சனேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் 637001 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  21.01.2022 

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/4887/411/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.