தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாங்க் ஆப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பாங்க் ஆப் பரோடா வங்கியில் விவசாய சந்தையியல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:45 am

தினமணி



பாங்க் ஆப் பரோடா வங்கியில் விவசாய சந்தையியல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Agriculture Marketing Officer

காலியிடங்கள்: 47

தகுதி: விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை அறிவியல், பால் அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, வேளாண் வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு வேளாண் தொழில்நுட்பம், டெய்ரி டெக்னாலஜி, பட்டு வளர்ப்பு போன்ற ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எம்பிஏ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: ஆண்டிற்கு ரூ.18 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in/Careers.htm  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/wms-detailed-advertisement-07th-jan-2022-06-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.