யாருக்கு வாய்ப்பு? ரூ. 63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை
இந்திய அஞ்சல் துறையின் கோயம்புத்தூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். DMMS/E-123/2021/01
பணி: Skilled Artisans
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanic - 02
2. Electrician - 01
3. Welder - 01
4. Carpenter - 01
5. Tyreman - 01
6. Copper & Tinsmith - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படும்.
தகுதி: அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வுக் கட்டணம்: ரூ.400, விண்ணப்பப் படிவ கட்டணம் ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக (ஐபிஓ) எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் (சுய சான்று செய்யப்பட்ட) இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore - 641 001
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.08.2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.