தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்:01/2022 தேதி: 08.03.2022
மொத்த காலியிடங்கள்: 444
பணி: Sub-Inspectors of Police (Taluk) - 399
பணி: Sub-Inspectors of Police (AR) - 45
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்களும், காவல்துறையில் பணியாற்றுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ் தகுதித் தேர்வு, மெயின் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனிலே செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2022
மேலும் விபரங்கள் அறிய https://tnusrb.tn.gov.in/pdfs/siadvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.