அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்டெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிறுவனத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2022, 10:02 am

தினமணி

 
மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் நிறுவனத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Graduate Engineers, Diploma Engineers

மொத்த காலியிடங்கள்: 103

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.1.2022 தேதியின்படி, 18 முதல்  27 வயதுக்குள் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சியின்போது கிராஜூவேட் இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 14,000, டிப்ளமோ இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ. 12,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.04.2022

விபரங்களுக்கு: www.railtelindia.com அல்லது https://www.railtelindia.com/images/careers/PDFProvider%20(1).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.