மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தமிழக அரசில் வேலை... எங்கு, எப்போது, எப்படி விண்ணப்பிப்பது?

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 9:23 am

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 631

அறிக்கை எண் 27/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: உதவி புள்ளியியல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 211
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

பணி: கணக்கிடுபவர்
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

பணி: புள்ளியியல் தொகுப்பாளர்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150 + தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்த பதிவு இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 21.01.2023 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/stat%202022%20tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Related Article

டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு... குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய ஆயுர்வேத  நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சிறை அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கத்தார் ஏர்வேஸ் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.