ரூ.71,900 சம்பளத்தில் நீதித்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

நீதித்துறையில் காலியாக உள்ள நீதிமன்ற தேர்வாளர், டிரைவர் மற்றும் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர்  உள்ளிட்ட 1412 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
ரூ.71,900 சம்பளத்தில் நீதித்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு


நீதித்துறையில் காலியாக உள்ள நீதிமன்ற தேர்வாளர், டிரைவர் மற்றும் ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர்  உள்ளிட்ட 1412 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1412

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Examiner - 118
பணி: Reader - 39
பணி: Senior Bailiff - 302
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

பணி: Junior Bailiff - 574
பணி: Process Server - 41
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 69,900

பணி: Process Writer - 03
பணி: Xerox Operator - 267
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 60,800

பணி: Lift Operator - 09
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 58,500

பணி: Driver - 59
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வுகள் (ஓட்டுநர் பணி) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திறன் தேர்வுகள் (ஓட்டுநர் பணி) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினைத் தவிர மற்ற பிரிவினர் ரூ.550 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.08.2022 

மேலும் விவரங்கள் அறிய  https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com