மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 37
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இன்பர்மேசன் சர்வீஸ் - 22
பணி: பிளையிங் டிரைனிங் -0 4
பணி: சயின்டிபிக் ஆபிசர் - 03
பணி: அசிஸ்டென்ட் இயக்குநர் - 02
பணி: எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் - 02
பணி: போட்டோகிராபிக் ஆபிசர் - 02

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 1.9.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
<