இஸ்ரோ பள்ளியில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள Space Central School-இல் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ பள்ளியில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?



ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள Space Central School-இல் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.SDSC SHAR/RMT/01/2022

பணி: Post Graduate Teacher
பாடவாரியான காலியிடங்கள்: 
1. கணிதம் - 2
2. இயற்பியல் - 1
3. பயாலாஜி - 1
4.வேதியியல் - 1
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்மந்தப்பட்ட பாடத்தில் குறைந்தது 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் புலமை மற்றும் கணினிய்ல பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Trained Graduate Teacher
பாடவாரியான காலியிடங்கள்: 
1. கணிதம் - 2
2. இந்தி - 1
3. பயாலாஜி - 1
4. வேதியியல் - 1
5. பிஇடி - 1
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்மந்தப்பட்ட பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Primary Teacher
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சியல் டிப்ளமோ அல்லது பி.எட் முடித்து சிடெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கற்பிக்கும் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ளும் எஸ்சி,  எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com