மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். BNRCL/HR/0250/Project(Design)2021/C-29843
பணி: Asst.Engineer-Design(Voiaduct & Elevated Stations)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Section Engineer(Arch)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Architecturs பிவில் டிகிர், டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பி.ஆர்க் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 3 ஆண்டு பணி அனுபவம் வேண்டும்.
இதையும் படிக்க | மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
பணி: Section Engineer (Design)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.40,000
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bnrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H. Road, Shanthinagar, Bengaluru - 560 027
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.01.2022
மேலும் விவரங்கள் அறிய www.bnrc.co.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...