விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டிரெய்னி அனலிஸ்ட் வேலை
கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நறுமண பொருள்கள் வாரியத்தில் (ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா) காலியாக உள்ள 46 டிரெய்னி அனலிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா
மொத்த காலியிடங்கள்: 46
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trainee Analyst (Chemistry) - 24
பணி: Trainee Analyst (Microbiology) - 09
பணி: Sample Receipt Desk (SRD) Trainee - 13
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,000
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.01.2022
மேலும் விபரங்கள் அறிய www.indianspices.com அல்லது http://www.indianspices.com/opportunities/details.html?id=409 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

