தமிழக சுகாதாரத்துறையில் கிராம செவிலியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 39 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurses) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறையில் கிராம செவிலியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான 39 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurses) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/MRB/2022

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) 

மொத்த காலியிடங்கள் : 39 

பணி: Village Health Nurses

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் துணை செவிலியர் மருத்துவச்சி, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (பெண்) படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் பதிவுச் செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  01.07.2022 தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி குறித்த திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2022/VHN_DAP_200122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com