மத்திய கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி ரசாயன நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி ரசாயன நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Secretariat Assistant(General)
காலியிடங்கள்: 04
பணி: Junior Secretariat Assistant (Finance & Accounts)
காலியிடங்கள்: 02
பணி: Junior Secretariat Assistant (Stores & Purchase)
காலியிடங்கள்: 02

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.30.830

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்திருக்க வேண்டும். மேலும் கணக்கியில் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: Junior Stenographer 

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,353

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.csmcri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்து ஒரே பிடிஎப் பைலாக மாற்றி விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022. 

மேலும் விவரங்கள் அறிய http://www.csmcri.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com