ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள Junior executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு


மத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள Junior executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/2022

பணி: Junior executive (Air Traffice Control)

காலியிடங்கள்: 400

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 14.07.2022 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமான நிலைய ஆணையத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, ICAO Language Proficiency Test, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.81, இதர பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com