ரூ. 44,900 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை

நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளர் (மொழிபெயர்ப்பாளர்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ. 44,900 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் வேலை
Published on
Updated on
1 min read

நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளர் (மொழிபெயர்ப்பாளர்) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். F.6/2021-SCA(RC)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Court Assistant (Junior Translator) 

காலியிடங்கள்: 25 (தமிழ், அசாம், வங்காளம், தெலுங்கு, குஜராத்தி, உருது, மராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி மொழியில் தலா 2 இடங்களும், நேபாளி -01)

தகுதி: ஆங்கிலத்தில் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் இருந்து காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மொழிக்கு மொழிபெயர்க்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவமும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு ரூ. 250 கட்டணமாக செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2022

மேலும் விவரங்கள் அறிய  https://main.sci.gov.in/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com