மத்திய ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?  

மத்திய அரசின் சிஎஸ்ஐஆர்-இன் கீழ் செயல்படும் மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?  

மத்திய அரசின் சிஎஸ்ஐஆர்-இன் கீழ் செயல்படும் மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிவிப்பு எண். 01/2022

மொத்த காலியிடங்கள்: 70  
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technician
காலிடங்கள்: 32
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கான இணையான படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Technical Assistant 
காலியிடங்கள்: 38 
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன்  டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 1,12,400 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 31.05.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://career.cgcri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி : The Controller of Administration, CSIR-Central Glass & Ceramic Research Institute, 196, Raja S. C. Mullick Road, Kolkata - 700 032.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 31.05.2022

மேலும் விபரங்கள் அறிய  https://career.cgcri.res.in/vacancy/index.php அல்லது https://www.cgcri.res.in/wp-content/uploads/2022/career/Advt.%20Gr.III%20and%20Gr.II.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com