ஆய்வக உதவியாளர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விண்ணவெளித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை தனி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!


இந்திய விண்ணவெளித்துறையின்கீழ் செயல்பட்டு வரும் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை தனி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 09/2022

பணி: Assistant
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Personal Assistant
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், மேலாண்மை, கணினி அப்பிளிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுத தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்துதிறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பதார்ரகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.pri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2022

மேலும் விவரங்கள் அறிய  prl.res.in/prl-eng/job_vacancies என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com