இந்திய அரசின் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Design Engineer(Mechanical)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Manufacturing, Industrial Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.
பணி: Design Assistant(Mechanical)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Production, Manufacturing, Industrial Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும் அல்லது Armoured vehicles Nigam Limited, Chennai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்பவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Works Manager(Admin), Engine Factory, Avadi, Chennai. Pin-600 054.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.4.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.