ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.REC-02/2024-1.KOL

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Driver 'A'

காலியிடங்கள்: 3

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Binder 'A'

காலியிடங்கள்: 2

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Binder பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர், கிளார்க் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி: Assistant (Library) 'A'

காலியிடங்கள்: 1

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நூலக அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250. இதர அனைத்து பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும், கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!
சூப்பர்வைசர், டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பிக்கும் முறை: www.isical.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chief Executive(A&F),

Indian Statistical Institute,

203, B.T. Road, Kolkata-7000 108

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 16.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com