வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நவோதயா பள்ளிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நவோதயா பள்ளிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!
Published on
Updated on
2 min read

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 1353 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Female Staff Nurse (Group B)

காலியிடங்கள்: 121

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்து இரண்டரை ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Section Officer (Group B)

காலியிடங்கள்: 5

வயதுவரம்பு: 23 - 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Audit Assistant (Group 8)

காலியிடங்கள்: 12

வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி:பி.காம் முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நவோதயா பள்ளிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!
ரூ.69,100 சம்பளத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை!

பணி: Junior Translation Officer (Group B)

காலியிடங்கள்: 4

வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி:ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Legal Assistant (Group B)

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு:23 - 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி:சட்டத்துறையில் பட்டம் பெற்று அரசுத் துறை, தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை

நிறுவனம் சார்ந்த சட்ட வழக்குகளைக் கையாள்வதில் மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Stenographer (Group C)

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Computer Operator (Group C)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 18 - 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிசிஏ, கணினி அறிவியல், ஐடி பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Catering Supervisor (Group C)

காலியிடங்கள்: 78

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மத்திய சுற்றுலாத் துறையில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பி.எஸ்சி கேட்டரிங், டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Secretariat Assistant (Group C)(Hqrs/RO Cadre)

காலியிடங்கள்: 21

பணி: Junior Secretariat Assistant {Group C)(JNV Cadre)

காலியிடங்கள்: 360

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நவோதயா பள்ளிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

பணி: Electrician cum Plumber (Group C)

காலியிடங்கள்: 128

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்க்ட்ரீசியன் அல்லது ஒயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் பணியில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Attendant (Group C)

காலியிடங்கள்: 161

சம்பளம்: மாதம் ரூ.மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Mess Helper (Group C)

காலியிடங்கள்: 442

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff (Group C)[Hqrs/RO Cadre]

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: Staff Nurse பணிக்கு ரூ.1500. இதர பணிகளுக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.