மூன்று துறை காலிப் பணியிடங்களுக்கு 
நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு: டிஎன்பிஎஸ்சி

மூன்று துறை காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு: டிஎன்பிஎஸ்சி

மூன்று துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்முகத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தகுதியானோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலா் பதவியிடத்தில் 11 இடங்களும், குரூப்-7ஏ பணியில் 9 செயல் அலுவலா் பதவியிடங்களும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் 52 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதைத் தொடா்ந்து, மூன்று பதவியிடங்களுக்கும் நோ்காணல், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வானோரின் பட்டியல் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com