
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கன்சல்டன்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரங்களை பார்ப்போம்.
பணி: Marketing Consultant - 1
சம்பளம்: மாதம் ரூ.150,000 - ரூ.2,00,000
வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சந்தையியல் துறையில் எம்பிஏ தேர்ச்சியுடன் சந்தையியல் மற்றும் விற்பனைத் துறையில் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Logistics Consultant - 1
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் Logistics, Supply Chain Management-இல் எம்பிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Consultant(Digital Transformation) - 1
சம்பளம்: மாதம் ரூ.2,00,000 - 2,50,000
வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் போன்ற துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Financial Management Analyst - 1
சம்பளம்: மாதம் ரூ.1,50,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Application Developer - 1
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் போன்ற துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்கள் ரூ.1,000, எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavin.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து 23 ஆம் தேதிக்குள் பதிவு, விரைவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director, The Tamilnadu Co-operative Milk Producers Federation Limited, No.3A, Pasumpon Muthuramalinganar Salai(Chamiers Road), Aavin Illam, Nandanam, Chennai - 600 035.
மேலும் விவரங்கள் அறிய www.aavin.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.