தினமும் ரூ.875 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் Applied Science and Humanities துறையில் தினமும் ரூ.875 சம்பளம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Professional Assistant பணி


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் Applied Science and Humanities துறையில் தினமும் ரூ.875 சம்பளம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Professional Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Professional Assistant - I
காலியிடங்கள்: 2
சம்பளம்: நாள் ஒன்றுக்கு ரூ.875 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
பணி: Professional Assistant - II
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.819 வழங்கப்படும்.
தகுதி: இயற்பியல் துறையில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர், நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையை பொறுத்து எழுத்துத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் முழுவிவரம் அடங்கிய பயோடேட்டாவை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Dean, Madras Institute of Technology, Anna University Campus, Chromepet, Chennai - 600 044
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 27.8.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...