ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சாகா் மித்ரா திட்டத்தில் பணியாற்ற அழைப்பு

சாகா் மித்ரா திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி, பழையகாயல் ஆகிய இரு மீனவக் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:34 pm

Din

தூத்துக்குடி: சாகா் மித்ரா திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி, பழையகாயல் ஆகிய இரு மீனவக் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்நோக்கு சேவை ஊழியா்களாக வெள்ளப்பட்டி, பழையகாயல் கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம்-மீனவா்நலத் துறையில் சாகா் மித்ரா திட்டத்தின்கீழ் பணிபுரிய விருப்பமுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஜூலை 1ஆம் தேதியில் 35 வயது நிறைவடையாதவா்களாக இருக்க வேண்டும். மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல், 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தோ்ச்சி-இவற்றில் ஏதேனும் ஒரு தகுதி இருக்க வேண்டும். தூத்துக்குடி வடக்கு, வேம்பாா் மீனவக் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஜன. 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி வடக்கு கடற்கரைச் சாலையிலுள்ள மீன்வளம்- மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகதை நேரிலோ, 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.