விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாதம் ரூ.64,480 சம்பளத்தில் மகாராஷ்டிரா வங்கியில் வேலை!

மாநிலம், தேசிய, சர்வதேச மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் மகாராஷ்டிரா வங்கி வீராங்கனைகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா வங்கி
மகாராஷ்டிரா வங்கி
Published on
Updated on
1 min read

முன்னணி பொதுத்துறை வங்கி மகாராஷ்டிரா வங்கி. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் புணே மற்றும் நாடு முழுதும் 2500-க்கும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வங்கிகளுக்கு இடையேயான மாநிலம், தேசிய, சர்வதேச மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் வீராங்கனைகளுக்காக வாடிக்கையாளர் சேவை பிரிவில் நிரப்பப்பட உள்ள 12 பணியிடங்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விளையாட்டு வீராங்கனைகளிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். AX1/ST/RP/Sportspersons Recruitment/Notification 2024-25

பதவி: Customer Service Associate

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.24,500 - 64,800

வயதுவரம்பு: 30.6.2024 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் விளையாட்டில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் விளையாடியிருக்க வேண்டும். விளையாட்டில் சாதனைகள் படைத்திருப்பது விரும்பத்தக்கது.

மகாராஷ்டிரா வங்கி
மிஸ் பண்ணிடாதீங்க.. மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் அறிவிப்பு

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, விளையாட்டுத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் மகாராஷ்டிரா வங்கியின் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும்.

விளையாட்டு தகுதித் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தாரர்கள் தொடர்ந்து இணையதளத்தை கவனிக்கவும். மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கப்படும். விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை Bank of Maharastra Recruitment of Meritorious Sportspersons - 2024-25, Pune என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

மகாராஷ்டிரா வங்கி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharastra.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager, HRM, Bank of Maharastra, HRM Department, Head Office, Pune - 411 005.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 8.7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com