
சென்னையை அடுத்த ஆவடி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Junior Research Fellowship
காலியிடங்கள்: 28
துறைவாரியான காலியிடங்கள்:
1. மெக்கானிக்கல் - 13
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 9
3. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 4
4. கணினி அறிவியல் - 2
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து கேட்-2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 37,000 + எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 12.7.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பின்ன நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு விவரம் தகுதியானவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும், இணையதளத்திலும் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, CVRDE-DRDO, Avadi, Chennai - 600 054
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 12.7.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.