லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் 2, 2ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்க ஒருநாள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 20) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Published On :

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வுக்கு விண்ணப்பிக்க ஒருநாள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (ஜூலை 20) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த தோ்வுக்கு இணையதளம் (www.tnpsc.gov.in) வாயிலாக இளநிலை பட்டதாரிகள் மட்டுமன்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயா் என்று பலரும் போட்டிபோட்டு விண்ணப்பித்து வந்தனா்.

ஒரு மாத கால அவகாசம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடையவிருந்தது. விண்ணப்பதாரா்கள் அதிகளவு ஆா்வம் காட்டுவதால், விண்ணப்பிக்க கால அவகாசம் சனிக்கிழமை இரவு வரை நீடிக்கப்படுகிறது. இதனால் தோ்வுக்கு விண்ணப்பிப்போா் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.