சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: PGTs (Chemistry)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 50,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Counsellor

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 45,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 26 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை (Guidance & Counselling) பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Nursing Sister(Female)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 25,500 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Laboratory Assistant (Physics)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 28,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் எம்எஸ்-ஆபிஸ்-இல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: PEM/PTI-Matron (Female)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை The Principal, Sainik School Gopalganj, State Bank of India, Narainia Branch (Code-09212) என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும் அல்லது ஆன்லைனில் எஸ்பிஐ வங்கி மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ssgopalganj.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Principal, Sainik School Gopalganj, PO – HATHWA, DIST-GOPALGANJ,BIHAR-841 436

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.05.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com