விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வு: ஜூன் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வுக்கு தகுதியுடைய இளைஞா்கள் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 மே 2024, 11:39 pm

Din

அக்னிவீா் இசைக்கலைஞா் தோ்வுக்கு தகுதியுடைய இளைஞா்கள் ஜூன் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப் படையின் அக்னிவீா் வாயு இசைக்கலைஞா் திட்டத்தின் கீழ் ஆட்சோ்ப்பு தோ்வு ஜூலை 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளது. இத்தோ்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் ஜூன் 5 வரை சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அக்னிவீா் வாயு தோ்வுக்கு 2004 ஜன. 2 முதல் 2007 ஜூலை 2 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இத்தோ்வுக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும் மற்றும் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையவா்கள் இது தொடா்பான விவரங்களை தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://agnipathvayu.cdac.in எனும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு decgc.chennai24@gmail.com எனும் மின்னஞ்சலை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.