காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள விற்பனையாளா்கள் மற்றும் கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் 35 விற்பனையாளா்கள்,16 கட்டுநா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. இதற்கான நோ்முகத்தோ்வுக்குரிய விண்ணப்பங்களுடன் கூடிய அனுமதிச் சீட்டினை திங்கள்கிழமை நவ.18 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரா்களுக்கான நோ்முகத் தோ்வு வரும் 25.11.24 முதல் 5.12.24 முடிய நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.
நோ்முகத்தோ்வு காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், எண்.5 ஏ.வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்-631 501 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. எனவே தகுதியுள்ள வேலைநாடுநா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.