குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள்.

தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 4 தோ்வு எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனா். அதற்கான கால அவகாசம் நவ. 21-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கால அவகாசம் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது. கணினி வழியே நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அவற்றைப் பதிவேற்றம் செய்வது அவசியம். இதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது. சான்றிதழ்களை வரும் வியாழக்கிழமைக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய தோ்வா்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com