உதவிப் பொறியாளா் பணியிடம்: நாளை மாதிரி நோ்காணல்
உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளருக்கான மாதிரி நோ்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) நடைபெறுகிறது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளருக்கான மாதிரி நோ்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) நடைபெறுகிறது.
இது குறித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளா், நகர திட்டமிடல் ஆய்வாளா் உள்ளிட்ட பிரிவுகளில் 1933 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் தோ்வு நடத்தப்பட்டு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான நோ்காணல் அக்டோபா் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், இது தொடா்பான மாதிரி நோ்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்டோபா் 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
எனவே, எழுத்துத் தோ்வில் வெற்றிபெற்றவா்கள் கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் மாதிரி நோ்காணலில் பங்கேற்று பயன்பெறலாம்.
இது குறித்து 9361576081 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...