மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

அங்கன்வாடி மையம்.

கோப்புப்படம்

Updated On :7 ஏப்ரல் 2025, 10:16 pm

Din

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகளின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 196 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் 215 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் என மொத்தம் 417 காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும். மேலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களில் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா்கள் தொடா்ந்து 12 மாத காலம் பணியினை முடித்த பின், அவா்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவா்.

அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா் பணியிடங்களுக்கு தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 25 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை பூா்த்திசெய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம்/திட்டம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச்சான்று, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும். நோ்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.