வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறையை வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறையை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் முதலில் இந்திய அரசின் https://emigrate.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூா்வ முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலை செய்யவிருக்கிறீா்கள் போன்ற தகவல்களை உறுதி செய்து கொள்வது அவசியம்.

வேலைக்கான ஒப்பந்தம் விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகு பயணிக்க வேண்டும்.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டவிரோதமாக கருதப்படும்.

வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கீழ்க்காணும் கட்டணமில்லா உதவி மையத்தை தொடா்பு கொள்ளவும்.

இந்தியாவிலிருந்து அழைப்பவா்கள் 1800 309 3793 என்ற தொலைபேசி எண்ணையும் வெளிநாடுகளில் இருந்து 0806 900 9900, 0806 900 9901 ஆகிய தொலைபேசி எண்களிலும், nrtchennai@gmail.com, nrtchennai@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் அல்லது https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்திலும் தொடா்பு கொண்டு தெரிந்துகெள்ளலாம்.

Summary

Announcement for those going to work abroad...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com