பொதுத்துறை நிறுவனத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி
Published on
Updated on
1 min read

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுனமான இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ரயில்வே, நெடுஞ்சாலைகள், கட்டடங்கள், மின்சாரத் துறை போன்றவற்றில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் 2023-2024 ஆம் ஆண்டில் 12,387 கோடிக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக மலேசியா, அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவிலான ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.

இந்நிறுவனத்தில் டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/2025

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice

காலியிடங்கள்: 20

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பிரிவுகள்:

1. Civil - 13

2. Electrical - 4

3. S&T-3

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள்: 10

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பிரிவுகள்:

1. Civil - 7

2. Electrical - 2

3. S&T-1

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித் திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.8,500 வழங்கப்படும்.

வயது வரம்பு: மேற்கண்ட 2 பயிற்சிகளுக்கும் 1.7.2025 தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதி முறைப்படி உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேர்முகத்தேர் விற்கு வரும்போது தேவையான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு நடை பெறும் இடம், தேதி பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப் படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய தகுதி குறித்த விவரங்களை www.mhrd nats.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.ircon.org என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2025

Summary

IRCON Recruitment for Graduate and Technician Apprentice

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com