வங்கித் துறையில் வேலை வேண்டுமா?: இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் சூப்பர் வாய்ப்பு!

இண்ட்பேங்க் மெர்ச்சன்ட் பேங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ....
வங்கித் துறையில் வேலை வேண்டுமா?: இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் சூப்பர் வாய்ப்பு!
Updated on
1 min read

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இண்ட்பேங்க் மெர்ச்சன்ட் பேங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Relationship Manager

காலியிடங்கள்: 10

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை

பணி: Digital Marketing Specialist

காலியிடங்கள்: 1

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை

பணி: Secretarial Officer-Trainee for Back office

காலியிடங்கள்: 1

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம்

பணி: Dealer - For Stock broking Terminals

காலியிடங்கள்: 8

சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 4.20 லட்சம்

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Head Administration

No 480, 1st Floor Khivraj Complex I,

Anna Salai, Nandanam

Chennai-35.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை படம் எடுத்து recruitment@indbankonline.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.1.2026

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD)invites applications from eligible candidates for the post of Relationship Manager, Digital Marketing officer, Secretarial Officer-Trainee for Back office and Dealer - For Stock broking Terminals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com