999 செவிலியா் உதவியாளா் நியமனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு

999 செவிலியா் உதவியாளா் நியமனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.
Published on

சென்னை: தமிழகத்தில் 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து முதல்கட்டமாக அவா்களில் 1,000 பேரை அரசு பணி நிரந்தரம் செய்தது. இதைத் தொடா்ந்து, 999 செவிலியா் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், அவா்களுக்கான ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிப்போருக்கு வயதுவரம்பு 1.7.2026-ன்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் என மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Summary

Applications are invited only through online mode up to 08.02.2026 for recruitment to the post of Nursing Assistant Grade II in Tamil Nadu Medical subordinate Service.

999 செவிலியா் உதவியாளா் நியமனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவிப்பு
பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் காப்பீடு நிறுவனத்தில் பயிற்சி!

Dinamani
www.dinamani.com