

மத்திய அரசின் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஜூலை 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆர்வமுள்ள பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி: தொழில்பழகுநர் பயிற்சி(Apprenticeship)
காலியிடங்கள்: 153
மாநிலங்கள் வாரியான காலியிடங்கள்: கர்நாடகம் - 26, மகாராஷ்டிரம் - 23, தமிழ்நாடு- 19, ராஜஸ்தான் - 18, கேரளம் -10, புதுச்சேரி - 4, குஜராத் - 8
தகுதி: பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 9000
பயிற்சி காலம்: ஓராண்டு
வயது வரம்பு: 1.12.2025 தேதியின் படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://uiic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.1.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.