டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129

நாட்டின் முன்னணி மின்துறை மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துரை நிறுவனமான டிஎச்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணி
டிஎச்டிசி  நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129
Published on
Updated on
1 min read

நாட்டின் முன்னணி மின்துறை மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துரை நிறுவனமான டிஎச்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer

பிரிவு: Civil - 30

பிரிவு: Electrical - 25

பிரிவு: Mechanical - 20

பிரிவு: Geology & Geo Technical - 7

பிரிவு: Environment - 8

பிரிவு: Mining - 7

பிரிவு: Wind Power Projects - 2

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் Geology, Applied Geology, Geological Technology பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive

பிரிவு: Human Resource

காலியிடங்கள்: 15

தகுதி: Personnel Management, IR, Labour Welfare பிரிவில் 60 சதவிகித மதிப் பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி யுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Work, HR பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Finance

காலியிடங்கள்: 15

தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணம்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.3.2025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com