அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?

கர்நாடகம் மாநிலம் மைசூருவில் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணி

News image
உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அதிநவீன ஆராய்ச்சி மையம், மைசூரு.
Updated On :4 மே 2025, 1:29 pm

DIN

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கர்நாடகம் மாநிலம் மைசூருவில் செயல்பட்டு வரும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதிநவீன ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி., டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிறுவனம் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) ஒரு அங்கமாகும்.

விளம்பர எண். Rec 03/2025

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electronics, Telecommunication, Computer Science, Information Technology, Communication போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினியரிங் படிப்பை படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 10.5.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 7

சம்பளம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400

தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் Food Science, Food Technology, Microbiology, Chemistry போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 10.5.2025 தேதியின்படி 28-க்குள இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு Mental Ability, General Awareness, English Language Skill மற்றும் முக்கிய பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும்., கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cftri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.5.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.