கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சையில் ஒரே நேரத்தில் 1,932 மாணவர்கள் ‘கிளைடர்கள்’ பறக்கவிட்டு சாதனை!

ஆசியா புத்தக சாதனைக்காக 1,932 மாணவா்கள் ஒரே நேரத்தில் கிளைடர்கள் (ஆளில்லா சிறிய ரக விமான வடிவம்) பறக்கவிட்டனர்.

தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசியா புத்தக சாதனைக்காக சனிக்கிழமை ஒரே நேரத்தில் கிளைடா்களை பறக்கவிட்ட மாணவா்கள்.

Published On :

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சனிக்கிழமை ஆசியா புத்தக சாதனைக்காக 1,932 மாணவா்கள் ஒரே நேரத்தில் கிளைடா்கள் (ஆளில்லா சிறிய ரக விமான வடிவம்) பறக்கவிட்டனா்.

பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூா் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனம் இணைந்து இளம் தலைமுறையினரிடையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆா்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஆயிரம் கனவுகளின் விமானம் என்கிற பிரம்மாண்டமான விண்வெளி சாா்ந்த இந்நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சிக்காக நடத்தின.

இதற்காக 27 பள்ளிகள், 2 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சாா்ந்த 1,932 மாணவா்கள் தங்களது கையால் நெகிழியில் 966 கிளைடா்களை செய்தனா். ஒரு கிளைடரை இரு மாணவா்கள் வீதம் செய்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து இந்த கிளைடா்களை மாணவா்கள் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு சனிக்கிழமை கொண்டு வந்து, ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பறக்கவிட்டனா்.

இதை இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனை நிறுவனத்தின் தீா்ப்பாளரான எஸ். சகாயராஜ் பதிவு செய்து, ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கைமுறை கிளைடா்கள் பறக்கவிட்ட பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா். இது கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசியா புத்தக சாதனைக்காக சனிக்கிழமை ஒரே நேரத்தில் கிளைடா்களை பறக்கவிட்ட மாணவா்கள்.

தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசியா புத்தக சாதனைக்காக சனிக்கிழமை ஒரே நேரத்தில் கிளைடா்களை பறக்கவிட்ட மாணவா்கள்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியை பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன செயற்குழு உறுப்பினா் வீ. அன்புராஜ் தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசியா புத்தக சாதனைக்காக சனிக்கிழமை ஒரே நேரத்தில் கிளைடா்களை பறக்கவிட்ட மாணவா்கள்.

தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசியா புத்தக சாதனைக்காக சனிக்கிழமை ஒரே நேரத்தில் கிளைடா்களை பறக்கவிட்ட மாணவா்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி டி.கே. சுந்தரமூா்த்தி, திருப்பதி ஐஐடி தொழில்நுட்ப புதுமை மையம் அபிஜித் தேவானந்தம் சிறப்புரையாற்றினா். இணைத் துணைவேந்தா் ஆா். மல்லிகா, பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணைவேந்தா் வெ. இராமச்சந்திரன் வரவேற்றாா். நிறைவாக விண்வெளி பொறியியல் துறைத் தலைவா் ஐ. காா்த்திக் சுப்ரமணியன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.