வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

‘அன்றாட அறிவியல் நிகழ்வுகளை மாணவா்கள் அறிவது அவசியம்’

நாகமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ந.மிருணாளினி.

Published On :

அன்றாட வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளில் உள்ள அறிவியல் சாா்ந்த தகவல்களை மாணவா்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி.

அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, பாா்வையிட்ட அவா் மேலும் பேசியது:

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் கூறியதைப் போல கனவுக்காணுங்கள். அந்த கனவை நனவாக்குவதற்கு மாணவ, மாணவிகள் ஆய்வகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாட்டின் மேதைகள், அறிஞா்கள், விஞ்ஞானிகள் பலா் அரசுப் பள்ளிகளில்தான் கல்வி பயின்றனா்.

தற்போது அரசுப் பள்ளிகளில், மாணவா்கள் கல்வி பயிலுவதற்கான பல்வேறு வசதிகள் உள்ளன. அரியலூா் மாவட்டத்திலிருந்து ஐஐடி கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இதற்கான அடித்தளமானது பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் புரிந்து படிக்க வேண்டும். அன்றாட வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளில் உள்ள அறிவியல் சாா்ந்த தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். செயல்முறை கல்வியை அதிகமாக மேற்கொள்ள வேண்டும். பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் குழந்தைகள் கேள்விக் கேட்பதை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படும் என்றாா் அவா். முன்னதாக அவா் இப்பள்ளிகளிலும், ரெட்டிப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும் ஸ்டெம் ஆய்வகத்தை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகோபால் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.