
இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (NCC Special Entry April - 2026)
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
வயது வரம்பு: 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று என்சிசி சான்றிதழ் தேர்வில் குறைந்தபட்சம் 'பி' கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை.
குறைந்தபட்சம் 150 செ.மீ. உயரமும், உயரத்திற்கேற்ற உடல் எடையும் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ. தூரத்தை 10 நிமிடம் 20 வினாடிக்குள் ஓடி முடிக்க வேண்டும். சிட் அப்ஸ் - 6, புஷ் அப்ஸ் -30, புல் அப்ஸ்-40 கும் திறன் மற்றும் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எஸ்எஸ்பி தேர்வு ஹைதராபாத் கொச்சி, பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெறும். தேர்விற்கான அழைப்புக்கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உரிய இடத்தில் புகைப்படம் ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னை Officer Training Academy-ல் 49 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி அக்டோபரில் தொடங்கும். நேர்முகத்தேர்வு உடற்தகுதித் தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகையுடன் 6 மாதம் அதிகாரிப் பணிக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப்பின் லெப்டினன்ட் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.join indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.9.2025.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.