இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: விண்ணப்பிக்க தகுதி என்ன?
இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை
ஐஐஎப்சிஎல்

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை
ஐஐஎப்சிஎல்
இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (ஐஐஎப்சிஎல்), சாத்தியமான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்டகால நிதி உதவியை வழங்குவதற்காக 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். நீண்டகாலக் கடன் வழங்கும் நிறுவனமான ஐஐஎப்சிஎல், தகுதிபெறும் உள்கட்டமைப்புத் துணைத் துறைகள் மற்றும் வழங்கப்படும் நிதிச் சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில், பொதுத்துறை உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிலேயே மிகவும் பரந்துபட்ட செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாகும்.
'உள்கட்டமைப்புத் துணைத் துறைகளின் ஒருங்கிணைந்த முதன்மைப் பட்டியலில்' அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அனைத்து உள்கட்டமைப்புத் துணைத் துறைகளிலும், 'புதிய' மற்றும் 'ஏற்கனவே உள்ள' என இரண்டு வகைத் திட்டங்களுக்கும் நிதியளிக்க இந்த நிறுவனம் அதிகாரம் பெற்றுள்ளது. இந்த துறைகளில் போக்குவரத்து, எரிசக்தி, நீர், சுகாதாரம், தகவல் தொடர்பு, சமூக மற்றும் வணிக உள்கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கியது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை வலுப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவிமேலாளர் பணியிடங்களை போட்டித் தேர்கவு மூலம் நிரப்புவதற்காந வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.IIFCL/HCM/2026/03/04
பணி: Manager (Grade B) - 4
பிரிவு: Generalist
காலியிடங்கள்: 2
தகுதி: எல்எல்பி, சிஏ, சிஎம்ஏ, ஐசிடபுள்யுஏ. நிறுவனச் செயலாளர்(சிஎஸ்), பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் போன்ற ஏதாவதொரு தகுதியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Manager(Grade B) – Environment and Social Safeguard
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல், முதுகலை, சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் அல்லது பட்டயம்; சமூகப் பணி, சமூகவியல், மானிடவியல், பொருளியல் மேம்பாட்டுச் சேவைகள் ஆகிய துறைகளில் எம்.எஸ்சி அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Grade A)
பிரிவு: Generalist
காலியிடங்கள்: 31
தகுதி: எல்எல்பி, சிஏ, சிஎம்ஏ, ஐசிடபுள்யுஏ போன்ற ஏதாவதொரு தகுதியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Environment and Social Safeguard
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Works, Sociology, Anthropology, Economics Development Servi9ces, Environmental Management,Environmental Science பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,500
வயதுவரம்பு: 28.2.2026 தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுபத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iifCl.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.4.2026
விண்ணப்பிப்போரின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...