பரோடா வங்கியில் நிரப்பப்புட உள்ள 100 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:
விளம்பர எண். BOB/HRM/REC/ADVT/2026/08
பணி: Specialist Officers
காலியிடங்கள்: 100
1. Assistant Vice President (Territory Head)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Wealth Management, Relationship Management துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.3.2026 தேதியின்படி 27 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
2. Deputy Manager (Relationship Manager, Wealth Strategist)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Wealth Management,Insurance, Relationship Management போன்ற துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.3.2026 தேதியின்படி 24 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு சலுகை: அரசு விதிமுறைப்படி உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு சலுகை வழங்கப்படும்.
பணி அனுபவம்: உதவி துணைத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்போர் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 6 ஆண்டுகளும், துணை மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 3 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டிய துறைகள் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வானது Reasoning, English Language, Quantitative Aptitude, Professional Knowledge ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபுள்யுஎஸ், ஓபிசி, பிரிவினர்களுக்கு ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு ரூ.175. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். கடைசி தேதிக்கு முன்னரோ அல்லது அன்றோ, ஆன்லைன் மூலம் வங்கியில் கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே, விண்ணப்பப் பதிவுச் செயல்முறை முழுமையடைந்ததாகக் கருதப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்க அதனை ஒரு பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Online applications are invited from eligible candidates for the following posts in Wealth Management Services Department....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மெட்ராஸ் உரத்தொழிற்சாலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் டிரெய்னி பணி!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - விண்ணப்பங்கள் வரவேற்பு!

தாம்பரம் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


